ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்!
ADDED :3717 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. காட்டுவனஞ்சூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கூடார வல்லியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடலுõர் மாவட்டம், திருவதிகையிலிருந்து பெருமாள் மற்றும் ஆண்டாள் சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்விக்கப்பட்டது. பின்னர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வெங்கடேச பாகவதர், துணை வட்டார வளர்ச்சி அ<லுவலர் அன்பழகன், பழமலை ஆகியோர் செய்திருந்தனர்.