பழநி தைப்பூசக் காவடி ஜன.17ல் புறப்பாடு
ADDED :3720 days ago
தேவகோட்டை: தேவகோட்டையிலிருந்து பழநிக்கு தைப்பூச திருநாளை முன்னிட்டு பல ஆண்டுகளாக பாதயாத்திரை செல்கின்றனர். இவ்வாண்டு பாதயாத்திரை ஜன.17 ந்தேதி காலை தேவகோட்டை யிலிருந்து புறப்படுகிறது. ஜன.15 ந்தேதி பழநி காவடி கட்டப்பட்டு தேவகோட்டை நகர் பள்ளிக்கூடத்தில் உள்ள முருகன் சன்னதியில் பொங்கலிட்டு காவடிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. மறு நாள் 16ந்தேதி சனிக்கிழமை காலை புறப்பட்டு தேவகோட்டை நகரைச் சுற்றிநகர் வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் காவடிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.17 ந்தேதி ஞாயிற்றுகிழமை அதிகாலை காவடிகளுக்கு பூஜை செய்யப்பட்டு பழநிக்கு புறப்படுகிறது.