உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகர ஜோதி தரிசனம்!

மகர ஜோதி தரிசனம்!

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு
ஜோதி தரிசனம் நடந்தது. அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. மாலை 4 மணிக்கு வல்லபை
விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதாவிற்கு 18 வகை அபிஷேகம் நடந்தன. மாலை 6:30
மணிக்கு ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோயில் வெளிபிரகாரத்தில் சரண கோஷம்
முழங்க மகரஜோதி தரிசனம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி வல்லபை
மோகன்சாமி, விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !