பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :3716 days ago
மதுரை: பழநி தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கும் விழா, ஒட்டன்சத்திரத்தில், வரும், 22ம் தேதி நடக்கிறது. இந்த அறப்பணிக்காக, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னிதி அருகே கே.டி.திருமண மஹாலில் சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழு சார்பில், பழநி முருகன் அன்னதானக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் இக்குழுவினர் ஆற்றிவரும், ஆன்மிக பணிகளில், பழநி தைப்பூச அன்னதானம் பிரதானமானது. பல கைகள் சேர்ந்து, அன்னம்பாலிப்பது அளப்பரிய அறப்பணி என்ற தாரக மந்திரத்துடன் நடக்கும் இந்த பணியில், தொண்டராக பங்கேற்க விரும்புவோர், 98421 98889; 99443 09719 ஆகிய, அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.