வாசுதேவ பெருமாள் கோவில் கோசாலையில் கோபூஜை
ADDED :3697 days ago
ஈரோடு: பெருந்துறை அருகே கொளத்தான்வலசு, வாசுதேவ பெருமாள் கோவிலில், உமையொருபாகன் கோசாலை அறக்கட்டளை சார்பில், கோபூஜை கோசூக்த மஹாயாகம் நடந்தது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, 27 நட்சத்திர கோமாதா வழிபாடும், கோசூக்த மஹா யாகமும், சிவகிரி ஆதீனம் பாலமுருகன் ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் தலைமையில், சிறப்பு பூஜைகள் நடந்தது.