மாரியம்மன் கோவில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :3697 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், காந்தியடிகள் நகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. குமாரபாளையம் - இடைப்பாடி சாலையில் உள்ள காந்தியடிகள் நகரில் புதிதாக கற்பக விநாயகர், கும்பத்து மாரியம்மன், மதுரை வீரன், ஓங்காளியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று காலை, 7 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. காலை, 10 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வரப்பட்டது. மாலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கோமாதா பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாவதி பூஜை ஆகியவை நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.