திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
கோயிலில் ஜன. 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஜி.எஸ்.டி., ரோட்டில் தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது.
பக்தர்கள் வேதனை: தெப்பக்குள தண்ணீரில் குபைகளாக மிதந்தது. மைய மண்டபம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. அவசர அவசரமாக வெள்ளை, காவி அடித்துள்ளனர். படிக்கட்டுகளில் கிடந்த குப்பைகள், சுவாமி தெப்பத்திற்குள் வரும்போதுதான் சுத்தம் செய்யப்பட்டது. மிதவை தெப்பம் ஆண்டுக்கு ஆண்டு மெலிந்து கொண்டே போகிறது. தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது என பக்தர்கள் குறிப்பிட்டனர்.