வரசித்தி விநாயகர், பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்!
ADDED :3555 days ago
மதுரை: திருநகர், மஹாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் மற்றும் பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று, தைமாதம் 6ந் தேதி (20.01.2016) புதன்கிழமையும், சுக்லபக்ஷமும் ஏகாதசி திதியும். ரோஹிணி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.15 மணி முதல் 11.00 மணிக்குள் மீன லக்னத்தில் பிரஸன்ன வரதராஜப்பெருமாள், பெருந்தேவிதாயார், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், இராமானுஜர், வேதாந்ததேசிகர், ஸ்ரீமந் நடனகோபால நாயகிசுவாமிகள், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) கருப்பண்ணசுவாமி ஆகிய மூலவ, உற்சவமூர்த்திகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ப்ரதிஷ்டாபன மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.