உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதமந்திரம் முழங்க.. ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வேதமந்திரம் முழங்க.. ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ராமேஸ்வரம்,: வரலாற்று சிறப்புமிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் கோயிலின் முதல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 1925ல் நடந்தது. 2 வது கும்பாபிஷேகம் 1947 பிப்., 27லும், 3 வது கும்பாபிஷேகம் 1975  பிப்.,5 லும், 4வது கும்பாபிஷேகம் 2001 பிப்., 5லும் நடந்தன. தற்போது 2016 ஜன., 20 ல் 5வது கும்பாபிஷேகம் நடைபெற்றுவருகிறது. ராமாயண  வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. உலக பிரசித்த பெற்ற இக்கோயிலில் ரூ.7.90 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டது.  

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் அருகில் உள்ள நந்தவனத்தில் 108 குண்டங்களுடன் யாகசாலை பூஜைக்கான பந்தல் அமைக்கப்பட்டது. இதில் கணபதி ஹோமத்துடன் கடந்த 15ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை கும்பாபிஷேகம்  கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !