சப்த கன்னியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :3552 days ago
திருத்தணி : தை கிருத்திகையையொட்டி, சப்த கன்னியம்மன் கோவிலில், 30 கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான சப்த கன்னியம்மன் கோவிலில் நேற்று, அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, சோளிங்கர், பொம்மராஜீபேட்டை, நகரி, புத்துார் உட்பட, 30 கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.அவர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மூலவர் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு, அங்கேயே சமைத்து, குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.