உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம் விழா : ஜன.25ல் தேரோட்டம்

வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம் விழா : ஜன.25ல் தேரோட்டம்

விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் தை பூசம் விழாவை தொடர்ந்து ஜன.,25ல் தேரோட்டம் நடக்கிறது.விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச விழா ஜன.,17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது .அன்று வெள்ளி சப்பரத்தில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நகர் வலம் வருதல் நடந்தது. ஜன.26 வரை நடக்கும் விழாவை தொடர்ந்து , ஜன.22ல் வாலசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை, சொக்கர், பிரியாவிடை அம்மன், மீனாட்சியம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் ரிஷபம், அன்ன வாகனங்களில் நெல்கடை வீதி வழியாக சமணர்களை கழுவேற்றி நகர் வலம் வருதல், ஜன.,23ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. ஜன.,24ல் மாலை 4 மணிக்கு வாலசுப்பிரமணியன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஜன.,25ல் மாலை 4.35 மணிக்கு விநாயகர், வாலசுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சட்ட தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி நாளான ஜன.,26 மாலை 4.15 மணிக்கு மஞ்சள் நீராடி கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !