திருத்தணி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்
ADDED :3551 days ago
திருத்தணி : பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று நடந்த மகா சம்ப்ரோக்ஷணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, பொன்பாடி கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று, சம்ப்ரோக்ஷணம் நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மூன்றுகால பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 9:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, கலச நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, பஜனை குழுவினரின் பக்தி பாடல்களும், இரவு 8:00 மணிக்கு, உற்சவர் வீதியுலாவும் நடந்தது.