செல்லியம்மன் கோவிலில் 24ல் கும்பாபிஷேகம்
ADDED :3551 days ago
அயத்துார்: அயத்துார், செல்லியம்மன் கோவிலில், வரும் 24ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு அருகே உள்ளது அயத்துார். இங்குள்ள செல்லியம்மன் கோவிலில், வரும் 24ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, 24ம் தேதி, காலை 6:00 யாகசாலை பூஜைகளும், காலை 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.பின், மதியம் 1:30 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு படையல் போடுதலும் நடைபெறும். பின், மறுநாள், காலை 5:00 மணிக்கு, தாய் வீட்டு சீதனத்துடன் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 8:00 மணிக்கு, முதல் நாள் மண்டலாபிஷேகமும் நடைபெறும்.