உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்களுக்குபாத சேவை முகாம்

பழநி பக்தர்களுக்குபாத சேவை முகாம்

எரியோடு: தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்கள் அய்யலூர், எரியோடு வழியே தைப்பூŒத்திறகு பாத யாத்திரையாக பழநி செல்கின்றனர். நெடுந்தூரம் நடப்பதால் பக்தர்களுக்கு கால்வலி, சுளுக்கு, ரத்தக்கட்டு, பாதங்களில் கொப்பளம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நடந்த முகாமில் எரியோடு திருஅருள் பேரவை தொண்டர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் கால்களில் மருந்து தடவி, கால்களை தேய்த்து விட்டு மசாஜ் செய்தனர். முகாமில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. வடமதுரை கலைமகள் உயர்நிலைப் பள்ளி தாளாளர் பெருமாள் துவக்கி வைத்தார். திருஅருள் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, ஒய்வு பெற்ற துணை கலெக்டர் மாரிமுத்து, டாக்டர்கள் பாலசந்திரன், பொன்மகேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !