அரசமங்கலம் கோவிலில் நாளை சுதர்ஸன ஹோமம்
ADDED :3552 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் 32ம் ஆண்டு திருநட்சத்திர மகோற்சவம், நாளை நடக்கிறது. விழாவையொட்டி, நாளை அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசையும், 5:30 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலாவும், காலை 8:30 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு ஸ்ரீலட்சுமி மஹா சுதர்சன ஹோமமும், பகல் 12:30 மணிக்கு பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, திருவாராதனம், சாற்றுமுறை, ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது. பின், மாலை 4:00 மணிக்கு சொற்பொழிவு, தொடர்ந்து 5:00 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, இரவு 7:30 மணிக்கு பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடக்கிறது.