குருங்குடியில் தீ மிதி திருவிழா
ADDED :5215 days ago
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி வடவாற்றங்கரையில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 4 மணிக்கு சக்தி அழைப்பும், 7 மணிக்கு தீக்குழி முகூர்த்தமும், மாலை 5 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. காட்டுமன்னார்கோவில், கண்டமங்கலம், குருங்குடி, நாட்டார் மங்கலம், ஷண்டன், வீராணநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். 14ம் தேதி மதியம் தீர்த்தவாரி உற்சவமும், இரவு கொடி இறக்குதலும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அ#யப்பன், பொருளாளர் ஹரிதாஸ், திருப்பணி செயலர் அருள் மற்றும் குருங்குடி கிராம மக்கள் செய்தனர்.