உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் 10 கோவில்களில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்தில் 10 கோவில்களில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் (ஜன.,29)  ஒரே நாளில், 10 கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர், கீழப்பழையாறை சோமகமலாம்பிகா சமேத சோமநாதசுவாமி திருக்கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

மேலும், கும்பகோணம் பெரிய கடைத்தெருவில், சாரநாதபெருமாள் கோவில், தாராசுரம் முனியாண்டி கோவில், மேலக்காவேரி யானையடி அய்யனார் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்கள், மல்லுகசெட்டித் தெரு சந்தானகோபாலசுவாமி கோவில் மற்றும் எல்லையம்மன் கோவில், மாதுளம்பேட்டை காளியம்மன் கோவில், என, 10 கோவில்களிலும், 3.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இதை தொடர்ந்து, ஒரே நாளில், 10 கோவில்களிலும், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !