தி.மலை துர்க்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!
ADDED :3740 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மூலவர் ஸ்வாமி சன்னதி கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் சக்தி” என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.