உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: ஏழைகளின் தாய்

ரமலான் சிந்தனைகள்: ஏழைகளின் தாய்

நோன்பிருக்கும் இந்த இனிய வேளையில் நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி) அவர்களின் வரலாறை வாசிப்போம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மாமியார் உமைமா பின்து என்பவருக்கும், ஜஹ்ஸ் என்பவருக்கும் மெக்கா நகரில் பிறந்தவர் சைனப் அன்னை. இறைவழிபாட்டில் இவருக்கு அதிக நம்பிக்கை உண்டு. நாயகத்தின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறும்போது, அந்தஸ்தில் நபிகளாரிடத்தில் என்னுடன் போட்டி போடுபவராக சைனப் (ரலி) காணப்பட்டார். மார்க்க விஷயங்களில் அவரைவிட சிறந்ததொரு பெண்ணை நான் கண்டதில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவராகவும், பேச்சில், அதிக நாணயம் மிக்கவராகவும், உறவினர்களை அனுசரித்து செல்பவராகவும், மிக அதிகமாக தானம் செய்பவராகவும் அவர் விளங்கினார், என்றார். அல்லாஹ்வின் ஆணைப்படி நபிகள் நாயகம் அவர்கள், அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். நாயகத்தின் மற்ற மனைவியரிடம், உங்களை உங்கள் பெற்றோர் நாயகத்திற்கு மணம் முடித்து வைத்தனர். என்னையோ அல்லாஹூத்தஆலா ஏழுவானங்களுக்கு மேலிருந்து மணம் முடித்து வைத்தார், என்று சைனப் அன்னை பெருமையாகச் சொல்வார். தர்மம் செய்வதில் இவருக்கு ஈடு இணையானவர்கள் வேறு யாரும் இல்லை. அவருக்கு நீளமான கை உண்டு. ஒரு முறை நபிகள் நாயகம் தம் மனைவியரிடம்,  உங்களில் யாருடைய கை நீளமாக இருக்கிறதோ அவரே என்னைத் தொடர்ந்து என் மனைவிகளில் முதலில் மரணிப்பார் என்று கூறினார். தனது 53வது வயதில் சைனப் அன்னை மரணமடைந்தார். ஏழை எளியோர் அவரது மரணத்திற்காக வருந்தினார்கள். உம்முல் மாஸாகீன் (ஏழைகளின் தாய்) என்று அவரை புகழ்ந்தார்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !