உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: நண்பர்கள் விஷயத்தில் கவனம்

ரமலான் சிந்தனைகள்: நண்பர்கள் விஷயத்தில் கவனம்

நட்பு என்பது ஒரு அரிய பொக்கிஷம். ஒருவருக்கு அமையும் நட்பைக் கொண்டே அவரது குணநலனைக் கணித்து விடலாம். நட்பு குறித்து, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம். ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஒவ்வொரு வரும் தனது நண்பனைத்தான் பின்பற்றுவான். கெட்டவர்களுடன் தோழமை கொள்ளாதே! ஏனென்றால் (அவர்களுடன் தோழமை கொண்டால்) அவர்களின் கணக்கில் உள்னையும் சேர்த்துக் கொள்ளப்படும். இறைவனிடத்தில் சிறந்தவர் யார் என்றால் தன்னுடைய நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே. ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருடைய நட்பை மற்றொருவர் துண்டித்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஒரு நாள் அவர்கள் விரோதிகளாக கூடும். விரோதிகளை அதிகமாக வெறுக்காதீர். ஒரு நாள் அவர்கள் தோழராகக் கூடும். வெட்கம் நன்மைகளை இழுத்து வரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம்போல் நடந்து கொள். ஈமானும் வெட்கமும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். ஒன்று போய்விட்டால் அடுத்தது இருக்கவே முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இஸ்லாத்தின் குணம் வெட்கப்படுவதாகும். இந்த அரிய பொன்மொழிகளை மனதில் கொண்டு நட்பை வகுத்துக் கொள்ளுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !