கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் ஆண்டாள் கல்யாண உற்சவம்
ADDED :3537 days ago
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் ஆண்டாள் கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை பெருமாளுக்கு தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்த மாலை மற்றும் சீர் வரிசைகளை, ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து, வேதங்கள் முழங்க, அழகிரிநாதர், ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் புனையும் வைபவம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுடர்மாலை மற்றும் பச்சைக்கிளி ஆண்டாளுக்கு சாத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.