ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடைவீதி திருவிழா !
ADDED :3537 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடைவீதி திருவிழா நடந்தது. கடலுார் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸவரி அம்மன் கோவிலில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் தை மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படும் கடைவீதி திருவிழா கடந்த 29ம் தேதி நடந்தது. அதனையொட்டி அன்று 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையை தொடர்ந்து கடைவீதி மண்டகப்படிக்கு அம்மன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு காமதேனு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.