உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் வழிபாடு

லட்சுமி நரசிம்மர் கோவிலில் வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த, ஆவணியாபுரம் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும், மூன்று கால பூஜை, சனிக்கிழமை தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம், லட்சுமி நரசிம்மருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சமி நரசிம்மருக்கு, பால், தயிர், சந்தனம், ஆகியவற்றால் அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !