மாசி மகத்திற்கு சிறப்பு ரயில்: பக்தர்கள் வேண்டுகோள்
ADDED :3619 days ago
சிவகாசி: மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி வழியாக கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில் இயக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து செங்கோட்டையில் இருந்து சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக கும்பகோணத்திற்கு நேரடி ரயில் வசதி இல்லாததால் பக்தர்கள் பஸ் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.