உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

வீரபாண்டி: சேலம் நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நாளை நடக்கிறது. இதையொட்டி, நேற்று நடந்த, தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முன்னதாக, அம்மன் கோவிலில் துவங்கிய பால்குட ஊர்வலம், நெய்காரப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக, வாண வேடிக்கை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோமாதாவுடன் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களில் இருந்த புனிதநீர், கும்பாபிஷேக சிறப்பு பூஜையில் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !