உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மண்டலத்தில் நாளை கும்பாபிஷேகம்

செம்மண்டலத்தில் நாளை கும்பாபிஷேகம்

கடலூர்: கடலூர் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ., அருகில் உள்ள தேவி செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 3ம் தேதி  நடக்கிறது. இதனை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், தீபாராதனை நடந்தது. 31ம் தேதி மாலை 6:00  மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று 1ம் தேதி காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை  இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ அர்ச்சனைகள், மாலை 5:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை 3ம் கால யாக பூஜை, ருத்ரபாராயணம் நடந் தது. இன்று 2ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, விஷ்ணு சகஸ்ர நாமம், மாலை ஐந்தாம் கால யாக பூஜை, புதிய விக்கிரகங்கள் கரிக்கோலம்,  கோ பூஜை, கன்னிகா பூஜை, விக்கிரகங்கள் பிரதிஷ்டை, விமான கலசங்கள் பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.  நாளை 3ம் ÷ ததி காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !