உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டார் கோயிலில் 2007 திருவிளக்கு பூஜை

திருவட்டார் கோயிலில் 2007 திருவிளக்கு பூஜை

திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரளி, கோதை ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் சிறப்பு பெற்றும் விளங்குகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலும், இக்கோலும் தோற்றத்திலும், அமைப்பிலும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரு திருத்தலங்களிலும் இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயனராக காட்சி தருகிறார். இத்தகு சிறப்பு பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் விவேகானந்தபுரம் கேந்திரா சார்பில் 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் பூர்ணகுமாரி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். நெட்டாங்கோடு சாரதாதேவி ஆசிரம மீராபுரி மாதாஜி, வெள்ளிமலை ஆசிரம ஆத்மானந்த சுவாமிகள் திருவிளக்கு பூஜை நடத்தினர். விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அருமைதங்கம், ஐயப்பன், லீலா, அம்பிகா, கிருஷ்ணம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !