ராமேஸ்வரம் கோயிலில் மண்டலாபிஷேகம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மண்டலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஜன.,20ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 45 நாட்களுக்கு பின் மண்டலாபிஷேகம் நடப்பது வழக்கம். ஆனால் இம்மாதம் மகாமகம், மாசி சிவராத்திரி விழா நடக்க உள்ளதால், 15வது நாளில் மண்டலாபி ஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க 4 குண்டத்தில் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 2ம் கால யாக பூஜை, மகா தீபாராதனை முடிந்ததும் 4 புனித நீர் கலசத்தை கோயில் குருக்கள் எடுத்து சென்று சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், ராமேஸ்வரம் சிருங் கேரி மடம் மேலாளர் நாராயணன், கண் காணிப்பாளர் ராஜாங்கம், கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமல நாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.