உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்ரீஸ்வர சிவயோகி திருவிழா சுத்தூரில் நாளை முதல் துவக்கம்

சிவராத்ரீஸ்வர சிவயோகி திருவிழா சுத்தூரில் நாளை முதல் துவக்கம்

மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் சுத்துார் புண்ணிய ஸ்தலத்தில், ஆதி ஜகத்குரு சிவராத்ரீஸ்வர சிவயோகி திருவிழா மகோத்சவம், நாளை முதல், வரும், 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில், 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்துார் திருவிழா மகோத்சவ கமிட்டி தலைவர் கங்காதரன் கூறியதாவது: சுத்துார் புண்ணிய ஸ்தலத்தில், மடாதிபதி சிவராத்ரி தேசிகேந்திர சுவாமிகள் தலைமையில், நாளை முதல், வரும், 10ம் தேதி வரை, ஆறு நாட்கள், திருவிழா நடக்கிறது. ரத உற்சவம், தெப்ப உற்சவம், பிரம்மோற்சவம் உட்பட விவசாய மேளா, மாடுகள் திருவிழா, பொருட்காட்சி, கூட்டு திருமணம், குஸ்தி போட்டி என, பல வகையான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. முதன் முறையாக, மாநில அளவிலான, ஓவிய சந்தை, டிஜிட்டல் திருவிழா நடத்தப்படவுள்ளது.

இம்முறை சுத்துார் திருவிழாவுக்கு, 20 லட்சம் பேர் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கிறோம். 1.20 லட்சம் பேர் தங்குவதற்காக, தற்காலிக வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும், மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !