அன்னை காமாட்சியம்மன் கோவில் திருவிழா
ADDED :3536 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை அன்னை காமாட்சியம்மன் கோவிலில், திருவிழா நடந்தது.
விழா கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏகாம்பரேஸ்வரரும், காமாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாவிளக்கு பூஜை, ஊஞ்சல், வடை, பாயாச பூஜை, பூவோடு நிகழ்ச்சியும் நடந்தது. வண்ணமய வாணவேடிக்கை நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது. பின், மகா அபிேஷகம் நடந்தது. இதில், திரளான
பக்தர்கள் பங்கேற்றனர்.