உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, மாரியம்மன் கோவில் விழா சிறப்பாக நடந்தது. மொடக்குறிச்சி அருகே, கொடுமுடி புது மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 26ம் தேதி வாண வேடிக்கையுடன் தொடங்கியது. விழாவில், நேற்று முன்தினம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பெண்கள் முளைப்பாறி எடுத்து வந்து காவிரியில் விட்டனர். யானையில் பக்தர்களுடன் சென்ற குருக்கள், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்தனர். பெண்களும் ஆண்களும் தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் அம்மனை வணங்கினர். விழாவில் இன்று மாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !