உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத கடைசி ஞாயிறுக்கிழமை அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாத கடைசி ஞாயிறுக்கிழமை அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஊத்துக்கோட்டை : ஆடி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கடந்த மாதம் 17ம் தேதி, ஆடி மாத விழா துவங்கியது. தொடர்ந்து 14 வாரங்கள் அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெறும். நேற்று ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவிலில் தங்குவதற்கு இடமின்றி, ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்கள் மற்றும் தனியார் அறைகளில் தங்கி பக்தர்கள் தங்கினர். மேலும் சில பக்தர்கள் தங்குவதற்கு இடமில்லாமல், வந்த வாகனங்களிலேயே இரவு தங்கினர். நேற்று காலை குளித்துவிட்டு அலகு குத்தியும், வேப்ப இலை அணிந்து கோவிலைச் சுற்றி வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கனரக வாகனங்கள், ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு வழியாக திருப்பி விடப்பட்டன. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பாரதி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !