பாபநாசம் அருகே ஊஞ்சல் உற்சவம்
ADDED :5225 days ago
பாபநாசம்: பாபநாசம் அருகே உத்தமதானபுரம் லட்சுமிநாரயண பெருமாள்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மூலவர் லட்சுமிநாரயண பெருமாள், உற்சவர் வேணுகோபாலன், ராதா ருக்மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஊஞ்சலில் வைத்து பெண்கள் துதிபாடினர். உலக நன்மைக்காக சங்கல்பம் செய்து அர்ச்சனை நடந்தது. கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அனைவருக்கும் நீலமேக பட்டாச்சாரியார் பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கே ற்றனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.