உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவீன மயமாகும் மீனாட்சி அம்மன் கோயில்: 3 மொழிகளில் கட்டண விபரம்!

நவீன மயமாகும் மீனாட்சி அம்மன் கோயில்: 3 மொழிகளில் கட்டண விபரம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவீனமயம் திட்டத்தின் கீழ் கட்டண விபரங்கள், கோயில் நடை திறப்பு குறித்து டிஜிட்டல் விளம்பர பலகை மூலம் தமிழ், ஆங்கிலம், இந்தியில் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது.அம்மன் சன்னதி, ராஜகோபுரம் முன் டிஜிட்டல் பலகைகள் இரண்டு, தனியார் பங்களிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.கட்டண விபரம்: கட்டணமில்லா தரிசனம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் நபருக்கு ரூ.50. அம்மன், சுவாமி சன்னதி தரிசன கட்டணம் ரூ.20. அம்மன், சுவாமி சன்னதி சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 உள்ளிட்ட அனைத்து கட்டண விபரங்கள், கோயில் நடை திறப்பு (அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 12.30 மணி, மாலை 4.00 முதல் இரவு 9.30 மணி) உள்ளிட்ட விவரங்கள், விழாக்காலங்கள் குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தியில் அடுத்தடுத்து ஒளிபரப்பப்படுகிறது.இது பக்தர்கள், வெளிநாட்டு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !