உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

வேத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையம், சிங்காரம் தெருவில் உள்ள பழமையான வேத விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை  மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து கோ  பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை, மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரக்ஷபந்தனம்  யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் புதிய விக்ரகங்களுக்கு கண் திறந்து அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால ய õகசாலை பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் யாத்ராதானத்தைத் தொடர்ந்து கடம் புறப் பாடாகி காலை 9:40 மணிக்கு கோபுர கலசத்திற்கும் 10:00 மணிக்கு வேத விநாயகர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம்  மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !