உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கொடிக்கம்பம் ஊர்வலம்!

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கொடிக்கம்பம் ஊர்வலம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். குண்டம் திருவிழா ஆண்டுதோறும்  விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இவ்விழா நடப்பாண்டிலும் வரும் 8ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, வனப்பகுதியிலிருந்து  கொடிக்கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.  விழாவையொட்டி, ஒரே மரத்தால் ஆன மூங்கில் கம்பம் எடுக்க, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள்,  சர்க்கார் வனப்பகுதிக்கு சென்றனர்.   அங்கிருந்து, 83 அடி உயரம் கொடிக்கம்பம் எடுத்து வரப்பட்டது. பின், அங்குள்ள மாரியம்மன் கோவிலில்,  கம்பத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  முறைதாரர்கள்  ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகி÷ யாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின், அங்கிருந்து கம்பம் ஊர்வலமாக ஆனைமலைக்கு கொண்டு வரப்பட்டது. இவ்விழாவில், பேரூராட்சி  தலைவர், முறைதாரர்கள் மனோகரன், கிருஷ்ணன், அருளாளிகள் அருள், குப்புச்சாமி மற்றும்  மாசாணியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர்,  பொதுமக்கள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.  – நமது நிருபர் –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !