உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலம் பெருமாள் கோவிலில் குத்து விளக்கு பூஜை

நீலமங்கலம் பெருமாள் கோவிலில் குத்து விளக்கு பூஜை

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் பெருமாள் கோவிலில் நேற்று மாலை 108 குத்து விளக்கு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சீதாலஷ்மன அனுமன் சமேத கோதண்டராமர், காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர், தண்டபாணி கோவில்களில், தை நான்காவது வெள்ளிக் கிழமையொட்டி சிறப்பு பூஜைகளும், ராகு கால துர்கையம்மன் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் 108 குத்து விளக்கு பூஜைகள் நடந்தது. பெண்கள் குங்கும அர்ச்சனை செய்தனர். சேதுராம அய்யர் பூஜைகள் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !