உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாண கோயிலில் கடல்புற்கள் அகற்றம்

நவபாஷாண கோயிலில் கடல்புற்கள் அகற்றம்

தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாண கோயில் கடற்கரையில் டன்கணக்கில் தேங்கியிருந்த புற்களை அறநிலையத் துறையினர் அகற்றினர். தேவிபட்டினம் நவபாஷாணம் கோயிலுக்கு பரிகார பூஜைகள் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அக்கோயிலை சுற்றி சுகாதார கேடாக இருப்பதாக புகார் எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் பராமரிக்கும் பொறுப்பு அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் கழிவுகள், குப்பை அகற்றப்பட்டு கோயில் தூய்மையாக உள்ளது. தற்போது கரை ஒதுங்கிய கடல் புற்கள் கோயில் அருகே டன் கணக்கில் தேங்கி யிருந்தன. இதையடுத்து இந்து அறநிலையத் துறையினர் உழவாரப் பணி மூலம் புற்களை அகற்றினர். தக்கார் இளங்கோ கூறுகையில், ""கடல் புற்கள் அடிக்கடி கரையில் ஒதுங்கும். அவற்றை தொடர்ந்து அகற்றி வருகிறோம். கோயிலை சுற்றிலும் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !