உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமாங்க தெப்பக்குளம் தூர்வாரும் பணி நிறுத்தம்: பக்தர்கள் ஏமாற்றம்!

மாமாங்க தெப்பக்குளம் தூர்வாரும் பணி நிறுத்தம்: பக்தர்கள் ஏமாற்றம்!

பரமக்குடி:  பரமக்குடி அருகே எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.  எமனேஸ்வரம் மாமாங்க தெப்ப குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் நீராடுவது வழக்கம். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை எமனேஸ்வர முடையார் சுவாமிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது.  மாமாங்க தெப்பக்குளம் பல ஆண்டுக ளாக தூர்வாரப் படாமல் கழிவுநீர் குட்டையாக மாறியது. பிப்., 22 ல் மகாமகம் நடக்கிறது. இதையடுத்து மகாமகத்திற்கு முன் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நகராட்சி மூலம் தெப்பக் குளத்தை தூர்வாரும் பணி துவங்கியது. முழுமையாக தூர்வாரப்படாத நிலையில் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.  நகராட்சி ஆணையர் கண்ணன் கூறுகையில், “மாமாங்க குளம் தூர்வாரும் பணி சில காரணங்களால் தடைபட்டது. மகாமகத்திற்குள் முழுமையாக தூர்வாரப்படும். குளத்தை சுற்றி கம்பி வேலி, நடைபாதை அமைக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !