உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 12ல் துவங்கி, 23 வரை நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதுமான, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, ஏப்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு பூண்டியில் இருந்து திருமுருகநாத சுவாமி வருகையும் இடம் பெறும். ஏப்., 13ல் சூரிய, சந்திர மண்டல காட்சி; 14ல், பூத, அன்ன, அதிகார நந்தி, கிளி வாகன காட்சி; 15ல், புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சி; 16ல், பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல்; 17ல், கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெறும். ஏப்., 18, அதிகாலை, 5:00 மணிக்கு பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருளல்; 19, 20ல் தேர் வடம் பிடித்தல்; 20ல் அம்மன் தேர் வடம் பிடித்தல், மாலை வண்டித்தாரை; 21ல் தெப்பத்தேர்; 22ல் நடராஜர் தரிசனம்; 23ம் தேதி காலை மஞ்சள் நீர் விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் அழகேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !