உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை ஹயக்கிரீவர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

முத்தியால்பேட்டை ஹயக்கிரீவர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்கிரீவர் கோவி லில் சகஸ்ரநாம அர்ச்சனை, வரும் 12ம் தேதி துவங்குகிறது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சகஸ்ரநாம அர்ச்சனை, வரும் 12ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் 108 நாட்களுக்கு சகஸ்ரகநாம அர்ச்சனை, லட்சார்ச்சனையாக நடக்கிறது. சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சகஸ்கர நாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா பிரசாதமாக வழங்கப்படும். அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள், பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி குறிப்பிட்டு 750 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !