உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக திருவிழா பிரசாதம்: அஞ்சலில் பெற அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு

மகாமக திருவிழா பிரசாதம்: அஞ்சலில் பெற அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு

சேலம்: கும்பகோணம் மகாமக திருவிழாவின் பிரசாதத்தை, வீட்டில் இருந்தபடியே அஞ்சல் மூலம் பெற, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலின் மகாமக விழா பிப்., 22ல் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் கும்பகோணத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில், கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் பயன் பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை, வீடுகளுக்கே பிரசாதம் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அஞ்சல் வழி மூலம் பிரசாதம் பெற, மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் அலுவலகங்களிலும், சிறப்பு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை கோவில் அலுவலகங்களில், 150 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தீதீதீ.ட்ச்டச்ட்ச்டச்ட்2016.டிண என்ற இணையதளத்திலும், மண்டல இணை கமிஷனர் மயிலாடுதுறை 04364-259298, உதவி கமிஷனர் கும்பகோணம், 0435-2430564 என்ற எண்களினாம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, மார்ச் 3ம் தேதிக்குள், மகாமக திருவிழா பிரசாதங்கள் சென்றடையும் வகையில், தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள, 320 சிறப்பு நிலை, 662 முதல்நிலை, 3,571 சிறப்பு நிலை கோவில்களிலும், 11 இணை கமிஷனர், 28 கமிஷனர் அலுவலகங்களிலும் மகாமக திருவிழாவுக்கான பிரசாத முன்பதிவு நடந்து வருகிறது. மேலும், இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வோர், தங்களின் முகவரி, தொடர்பு போன் எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !