உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி தேர்பவனி: பங்குமக்கள் பங்கேற்பு

பெரியநாயகி தேர்பவனி: பங்குமக்கள் பங்கேற்பு

கொளத்தூர்: பூமனூர் பெரியநாயகி திருத்தல தேர்பவனி நேற்று மாலை நடந்தது. இதில், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொளத்தூர் அடுத்த பூமனூரில் பிரசித்தி பெற்ற அன்னை பெரியநாயகி ஆலயம் உள்ளது. ஆலய திருவிழா கடந்த, 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் பங்கேற்ற திருவிழா திருப்பலி நடந்தது. மதியம், 2 மணிக்கு நற்கருணை ஆராதனை, 3 மணிக்கு வேண்டுதல் திருப்பலி நடந்தது. மாலை, 4 மணிக்கு, அன்னை பெரியநாயகி தேர்பவனி நடந்தது. இதில், மேட்டூர், கொளத்தூர் மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பங்கு மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை மைக்கேல்ராஜ் செல்வம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !