உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியேங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!

பாதூர் பிரத்தியேங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!

உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம்  நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையையொட்டி  நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது.  பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்  கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்களின் ஆசியுடன், மோகன குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக  குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. யாககுண்டத்தில் பட்டு புடவைகள், பழ வகைகள், பால், தயிர், நெய்  உள்ளிட்டவை இட்டு, யாகம்  நடந்தது. ஸ்ரீ பிரத்தியேங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழு ப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !