உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை!

பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை!

தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சி த்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில்,  நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் பொங்கல் வைத்து,  மாவிளக்கு தீபமேற்றி வழிபட்டனர். இரவு உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு வசந்தமண்டபடத்தில் வைத்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெண்  பக்தர்கள் பாடல்களை பாடி கும்மியடித்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் விழாவில்  அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !