உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் தை அமாவாசை: பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!

ராமேஸ்வரத்தில் தை அமாவாசை: பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!

ராமேஸ்வரம் : தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தீர்த்த வாரிக்காக பர்வதவர்த்தினி, பிரியாவிடை அம்மனுடன் ராமநாதசுவாமி தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினார். உடன் ராமர், சீதை, லெட்சுமணர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க சுவாமிகளுக்கு தீர்த்தவாரியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியபின் கடற்கரையில் தர்ப்பணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !