அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :3666 days ago
பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. . அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம் ஆண்டு தோறும் மாசி மாதம் நடந்து வந்த நிலையில், 34 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக தேரோட்டம் தடைப்பட்டது. இதனால் தேர் முழுவதும் பழுதடைந்து காணப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. மேலும், பொதுமக்களின் நிதி உதவியாக 25 லட்சம் ரூபாய் பெற்று, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்து முடிக்கப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பென்னாகரம் நஞ்சப்பன், பாலக்கோடு அன்பழகன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.