சேலத்தில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :3668 days ago
சேலம்: சேலத்தில், தை அமாவாசையொட்டி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கொடுமுடி, ராமேஸ்வரம், பவானி, மேட்டூர், கல்லவடக்கம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுப்பர். அந்த வகையில் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தர்ப்பணம் செய்வதற்காக அர்ச்சகர்களும் வந்திருந்தனர். வாழை இலையில் மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, கதம்ப பூ, வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, அகத்திக்கீரை, பூசணிக்காய், வாழைக்காய், காரைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், அரிசி, எள் பிண்டம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.