நெல்லையப்பர் கோயிலில் பத்திரதீபம் கோலாகலம்
ADDED :3733 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பத்திரதீப விழா கோலாகலமாக நடந்தது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் பத்திரதீப விழா கடந்த 6ம் தேதி துவங்கி நேற்று மாலை வரையிலும் நடந்தது. சுவாமி வேணுவனநாதரின் சன்னதியில் ருத்ரஜெபமும், அபிசேக ஆராதனைகளும் நடந்தன. திருமூலமகாலிங்கம், காந்திமதியம்மன் மூலவர் சன்னதிகளில்அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. நேற்று மாலையில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, உள்பிரகாரங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தனர்.