திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :3729 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேரோட்ட உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், உற்சவர் வெவ் வேறு அலங்காரத்தில், வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சசியான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று, மாலை 3:00 மணிக்கு திருப் பாதம்சாடி திருமஞ்சனமும், இரவு 8:30 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.